
அம்பாங், ஜூன்-2-சிலாங்கூர், தாமான் சஹாயா அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து 9 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவத்தின் போது அச்சிறுவன் வீட்டில் தனியாக இருந்ததாக அம்பாங் ஜெயா போலீஸ் கூறியது.
அடுக்குமாடியின் கீழ் சிறுவன் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:45 மணியளவில் போலீஸுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர், அவர்களோடு சம்பவ இடம் விரைந்த அம்பாங் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக, குடும்பத்தார், பொது மக்கள் என இதுவரை 5 நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான அலட்சியம் தொடர்பில், 2001-ஆம் ஆண்டு சிறார் குழந்தைகள் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.



