Latestமலேசியா

அரசு ஊழியர்களுக்கு Pandapro ஆண்டுச் சந்தாவில் 20 விழுக்காடு தள்ளுபடி

புத்ராஜெயா, அக்-14-அரசு ஊழியர்களுக்கான 2026 Pandapro RAHMAH தள்ளுபடி ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் Foodpanda நிறுவனத்தின் Pandapro உறுப்பினர் சந்தாவை 12 மாதங்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடியில் பெறும் வகையில் அத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புத்துறை அமைச்சும் Foodpanda நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் அத்திட்டம், ஊழியர்களுக்கான கலப்பு பணி நாள் (Hybrid Work Day) கொள்கைக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களின் அன்றாடச் செலவுச் சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசு மின்னஞ்சல் முகவரியைக் (@xxx.gov.my) கொண்ட அரசு ஊழியர்கள் மட்டுமே அச்சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள். ‘Payung RAHMAH’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அச்சலுகையை இன்று முதல் 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை Foodpanda செயலி வாயிலாகப் பெறலாம்.

அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், நாட்டின் நிர்வாகத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் MADANI அரசாங்கமும் தனியார் துறையும் கொண்டுள்ள கடப்பாட்டை அத்திட்டம் பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

அத்திட்டத்தை தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தொடக்கி வைத்தார். சலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்களில் உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!