Latestமலேசியா

அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது

ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 பெண்கள் மற்றும் 13 பையன்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 12 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

பள்ளி முடிந்த பிறகு ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் சண்டைக்கு காரணமாக இருந்ததாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் ACP M. குமராசன் கூறினார்.

கைதான பெண்கள் 3 நாட்களம், சிறுவர்கள் 4 நாட்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

29 வினாடிகள் கொண்ட சண்டை வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!