Latestமலேசியா

அலோர்காஜாவில் மோட்டார் சைக்கிளை இரவல் தர மறுத்த அண்ணணை வெட்டிய தம்பி

அலோர்காஜா, ஜூன் 7 – அலோர்காஜா கம்புங் நெல்லாயன் குவல லிங்கியில் (Kampung Nelayan Kuala Linggi ) தனது மோட்டார் சைக்கிளை இரவல் கொடுக்கத் தவறிய வர்த்தகர் ஒருவரை ஆத்திரத்திற்கு உள்ளான அவரது தம்பி கத்தியால் வெட்டினார். நேற்றிரவு 8.30 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தில் இடது கையின் நரம்பு அறுந்ததால் 33 வயது ஆடவர் தனது மூன்று விரலும் செயல்பட முடியாத சூழ்நிலைக்கு உள்ளானார். தாம் தாக்கப்படுவதற்கு முன் அந்த நபர் குவல சுங்கை பாருவிலுள்ள( Kuala Sungai Baru ) போலீஸ் நிலையம் சென்று தனக்கு உதவி தேவையென கோரிக்கை விடுத்துள்ளார். Tuah என்று அழைக்கப்படும் 27 வயதுடைய தனது தம்பி வீட்டில் வெறித்தனமாக கட்டையில் தாக்கியதோடு தனது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாக அலோர் காஜா போலீஸ் நிலையத்தின் தலைவர் Superintendan Ashari Abu Samah தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் தம்பியை கைது செய்வதற்காக குற்றத் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீசார் அந்த ஆடவருடன் அவரது வீட்டிற்கு சென்றபோதிலும் வீட்டிலிருந்த அவரது தம்பி முரட்டுத்தனமாக செயல்பட்டுள்ளான். தாக்குதல் நடத்திய வேலையில்லாத ஆடவன் பின்னர் கைது செய்யப்பட்டதோடு அவன் Methamphetamine போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காயத்திற்கு உள்ளான வர்த்தகர் தற்போது சீராக இருப்பதோடு அவர் மலாக்கா மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!