Latestமலேசியா

அலோஸ்டாரில் காற்பந்து விளையாட்டை காணவந்த 18 வயது இளைஞன் மயங்கி விழுந்து மரணம்

அலோஸ்டார், ஜூலை 20 – அலோஸ்டாரில் கெடா டாருல் ஹமன் (Kedah Darul Aman) காற்பந்து குழுவுக்கும் ஜோகூர் டாருல் தக்சிம் (Johor Darul Takzim) எனப்படும் JDT அணிக்குமிடையே நடைபெற்ற ஆட்டத்தை காண்பதற்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் அந்த ஆட்டத்தைக் காணாமலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

அந்த இளைஞரின் மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டாக  Kota Star மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சித்தி நோர் சலாவத்தி சாஹாட் (Siti Nor Salawai Saad ) உறுதிப்படுத்தினார்.

கெடா டாருல் ஹமான் விளையாட்டரங்கில் ரசிகர்கள் மத்தியில் இருந்தபோது அந்த இளைஞர் நேற்றிரவு இரவு ஏழு மணியளவில் கீழே விந்தார்.

அந்த இளைஞர் தனது இளைய சகோதரருடன் காற்பந்து விளையாட்டை காண வந்திருந்தார். இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே அரங்கத்தில் மயங்கி விழுந்தார்.

இந்த சம்பவத்தை கண்ட கூட்டத்தினர் உடனடியாக பொது தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவத்ததைத் தொடர்ந்து அவரகள் அந்த இளைஞனை உடனடியாக சிகிச்சைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

எனினும் அந்த இளைஞன் இறந்துவிட்டதை மருத்துவமனையின் அவசரப்பிரிவு பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

சிறு வயதிலிருந்தே அந்த இளைஞன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக சித்தி நோர் சலாவத்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!