
கோலாலம்பூர், மே-22 – ஆசியான் திறன் ஆண்டு (AYOS) 2025 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இவ்வாண்டு மலேசியாவின் ஆசியான் தலைமையுடன் இணைந்து, ஆசியான் வட்டாரத்தில் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் இது திறக்கிறது.
இந்த முயற்சி மனிதவள அமைச்சான KESUMA மற்றும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp மூலம் வழிநடத்தப்படுகிறது.
இது வட்டார திறமை மேம்பாட்டை மேம்படுத்துவதோடு ஆசியான் பணியாளர்களின் முழு திறனையும் வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான திறன் இடைவெளியைக் குறைத்தல்; பணியாளர்களின் மீள்தன்மையை மேம்படுத்த திறமை இயக்கத்தை ஊக்குவித்தல்; அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தல்; பகிரப்பட்ட செழிப்புக்காக வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்; மற்றும் எதிர்கால பணியாளர்களை தயார்படுத்த பொது-தனியார் ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் ஆகிய 5 முக்கிய நோக்கங்களால் இது இயக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதியன்று கோலாலம்பூர், பங்சாரில் தொடங்கப்பட்ட இந்த AYOS 2025, ஆசியானின் மிகப்பெரிய பலத்தை – அதன் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் துடிப்பான பணியாளர்களைப் பயன்படுத்துகிறது.
AYOS 2025 – வட்டார ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 7 முக்கிய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
முதல் பெரிய நிகழ்வான ஆசியான் மனித மூலதன மேம்பாட்டு முதலீட்டு கருத்தரங்கு (AHCDIS), வரும் மே 27 முதல் 28 வரை கோலாலம்பூரில் உள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெறும்.
ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஒட்டி இந்நிகழ்வு நடைபெறுகிறது.