Latestமலேசியா

ஆயர் தாவாரில் முதியவர் கொலை, மனைவி உயிருக்கு போராட்டம்: கொள்ளையர்களைத் தேடும் போலீஸ்

மஞ்சோங், மே-8-பேராக், ஆயர் தாவாரில் அதிகாலை வேளையில் நடந்த ஒரு கொடூரமான வழிப்பறிச் சம்பவத்தில், முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி படுகாயமடைந்தார்.

​நேற்று அதிகாலை 5.30 மணிக்கு Jalan Melayu-வில் உள்ள அத்தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்த ஓர் ஆடவன், வலிமையான பொருளைக் கொண்டு இருவரையும் தாக்கியுள்ளான்.

பின்னர் பணப்பை மற்றும் 2 கைப்பேசிகளை எடுத்துக் கொண்டு அவன் தப்பியோடினான்.

சரிந்து விழுந்த 84 வயது முதியவரை, அக்கம் பக்கத்தார் மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

எனினும் சிகிச்சைப் பலனளிக்காது அவர் உயிரிழந்தார்.

அவரின் மனைவி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுகிறார்.

இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ், அதே நாள் இரவு 27 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தது.

அவன் கொள்ளையிட்ட சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்காக 1 வாரம் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!