Latestமலேசியா

ஆற்றின் மதகுப் பகுதியில் செம்பனை எண்ணெய் கசிவு

கோலாலம்பூர், ஜூலை 6 – போர்ட் கிள்ளான் , ஜாலான் தங்கி(Jalan Tangki), ஆற்றின் மதகு பகுதியில் 50,000 லிட்டர் செம்பனை கசிவு ஏற்பட்டுள்ளதை சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறை கண்டறிந்துள்ளது.

சுத்தகரிக்கப்படாத செம்பனை எண்ணெய் கையிருப்பு பகுதியின் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அருகேயுள்ள ஆற்றில் 50,000 லிட்டர் செம்பனை எண்ணெய் கசிவு கலந்துவிட்டதாகவும் அதன் அடையாளத்தை சுங்கை அவுர் (Sungai Aur) ஆற்றில் காண முடிந்ததாக சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறையின் இயக்குனர் நோர் அசிசா ஜாஃபர் (Nor Azizah Jaafar) தெரிவித்தார்.

செந்நிறம் மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்ட ஒரு வகை எண்ணெய் ஆற்றின் மதகு பகுதியில் காணப்பட்டதைத் தொடர்ந்து சிலங்கூர் சுற்றுச்சூழல் துறை அவசர புகாரைப் பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் சம்பந்தப்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்ததாக நோர் அசிசா (Nor Azizah) கூறினார்.

அதோடு மதகு பகுதியில் கசிவு தடுக்கப்பட்டுள்ளதால் கடல் நீர் பகுதியில் செம்பனை எண்ணெய் கலக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!