கர்நாடக, ஏப்ரல் 4 – கர்நாடக மாநிலத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்த போது 15 முதல் 20 அடி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விசாரணயில் அக்குழந்தையின் தந்தையால்தான் அக்கிணறு தோண்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, வீடியோ மூலம் குழந்தையின் கால்களின் அசைவுகளை வைத்து தற்போது ஆக்சிஜன் வழங்குவதற்காகக் கிணற்றுக்குள் குழாய்கள் செருகப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கர்நாடக மந்திரி எம்.பி. பாட்டீல், விரைவாக குழந்தையை மீட்க விஜயபுரா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகவும், குழந்தை மீண்டும் பெற்றோருடன் பாதுகாப்பாக இணைவதற்கு பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.