
ஜார்ஜ் டவுன்: கடந்த வாரம் ஆஸ்திரேலியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அப்பெண்ணுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
ஜூன் 28 ஆம் தேதியன்று, பகுதி நேர ஹோட்டல் வேலை செய்யும் 25 வயதான ஆடவன், பெரோடுவா ஆக்சியா காரில் பாதிக்கப்பட்டவரைப் பாலியல் பலாத்காரம் செய்து, எஸ்டேட் பகுதி ஒன்றில் உலோக கத்தரிக்கோலைப் பயன்படுத்தி அப்பெண்ணைக் காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது வெறும் கற்பழிப்பு வழக்கு மட்டுமல்ல மாறாக மலேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கக்கூடியப குற்றம் என்பதால் குற்றவாளிக்கு எவ்வித ஜாமீனும் வழங்க இயலாது என்று நீதிபதி உறுதியாக கூறியுள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அக்குற்றம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய சவுக்கடியும் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.