
கோலாலம்பூர், மார்ச்-17-மலேசிய இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரலும் நலன்களும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற தனது கடப்பாட்டை ம.இ.கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கும், மலேசிய வரலாற்றிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்குண்டு.
எனவே, அவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ம.இ.கா தலைமையகத்தில் நேற்றிரவு இந்திய முஸ்லீம் சமூகத்துடன் நடைபெற்ற இஃப்தார் நோன்புத் துறக்கும் நிகழ்வில் பேசியபோது அவர் அவ்வாறு சொன்னார்.
ரமலான் மாதம், ஒற்றுமையை வலுப்படுத்தி, நட்புறவுகளை ஆழப்படுத்தி, ஒளிமிகு எதிர்காலத்திற்கான போராட்டத்தில் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் பங்கேற்ற இந்நிழ்வில், இந்திய முஸ்லீம் சமூகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பெருநாள் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.



