
இந்தியக் கடப்பிதழ் மற்றும் கடப்பிதழ் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இன்று முதல் அக்கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதாக ஜூன் 25 ஆம் தேதி குறிப்பிடப்பிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பில் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசிதழ் அறிவிப்பு மற்றும் புதிய கட்டணங்களின் விரிவான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. கடப்பிதழ் மற்றும் அது தொடர்பான சேவைகளைப் பெற விரும்புவோர், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் திருத்தப்பட்ட கட்டணங்களின் அட்டவணையைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருத்தப்பட்ட கட்டணங்கள் கடப்பிதழ்கள் மற்றும் அவசரச் சான்றிதழ், காவல் துறை அனுமதிச் சான்று, கடப்பிதழ் ஒப்படைப்புச் சான்றிதழ் போன்ற கடப்பிதழ் தொடர்பான சேவைகளுக்குப் பொருந்தும்.



