Latestஉலகம்

இந்தியாவில் சத்திஸ்கரில் பிக்ஆப் வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 17 பேர் மரணம், எண்மர் காயம்

புதுடில்லி, மே 21 – இந்தியாவில் Chattisgarh மாநிலத்தில் Pick Up வாகனம் சாலையிலிருந்து வழுக்கி பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 17பேர் உயிரிழந்தனர். அந்த துயரச் சம்பவத்தில் மேலும் எண்மர் காயம் அடைந்தனர். Chattisgarh தலைநகர் Raipurரிலிருந்து 173 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Bahpani மாவட்டத்தில் அந்த விபத்து ஏற்பட்டது. காட்டில் பீடி இலையை பறித்துவிட்டு 25 தொழிலாளர்கள் அந்த Pick Up வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!