Latestஉலகம்

இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் முன் கடனை செலுத்துங்கள்; இந்தோனேசியாவில் இறுதிச் சடங்கில் குழப்பம்

ஜகர்த்தா, மார்ச் 4 -இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு
மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் அவரது கடன்களை அவரது வாரிசுதாரர்கள் அடைக்க வேண்டும் என கோரப்பட்டதால் இறுதிச் சடங்கில் பெரும் குழம்பம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மதுரா தீவிலுள்ள சம்பாங்கில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இறந்தவருக்கு பல கடன்கள் நிலுவையில் இருந்ததால், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு எடுத்துச் செல்வதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டதாக சாம்பாங் போலீஸ் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, துணை கமிஷனர் எகோ புஜி வாலுயோ (Eko Puji Waluyo )தெரிவித்தார்.

இறந்தவரின் குடும்பத்தினர் கடனை அடைப்பதற்கு பொறுப்பேற்க விருப்பம் தெரிவிக்கும் வரை, உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என குறிப்பாக பல பெண்கள் கோரிகை எழுப்பிதாக எகோ கூறினார்.

பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறந்தவரின் குடும்பத்தினர் இறுதியாக கடனைத் திரும்ப செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

இதனிடையே இறந்தவர் 25 கிராம் தங்கம், 15 மில்லியன் Ruppiah உட்பட மொத்தம் 50,000 மலேசிய ரிங்கிட்டிற்கு நிகராக 215 மில்லியன் Ruppiah கடன்களை ஒப்படைக்க வேண்டும் என பெண் ஒருவர் கூறுவதை காணொளியில் கேட்க முடிந்தது.

 

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!