
இஸ்தான்புல், நவம்பர்-16 – சுற்றுலாவுக்காக இஸ்தான்புல் சென்ற துருக்கி-ஜெர்மன் குடும்பமொன்று நச்சுணவால் பாதிக்கப்பட்டு, தாயும் 2 பிள்ளைகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமையன்று, பிரபலமான சாலையோர உணவுகளைச் சாப்பிட்ட பிறகு மொத்தக் குடும்பமும் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானது.
முறையே 6 மற்றும் 3 வயதுடைய இரு குழந்தைகள் வியாழக்கிழமையும், தாயார் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
தந்தை மோசமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
street food உணவுகளே பாதிப்புக்குக் காரணம் என ஊடகங்கள் கூறிய நிலையில், அக்குடும்பம் தங்கியிருந்த ஹோட்டலின் தரைத்தளத் அறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து ஹோட்டல் ஊழியர் மற்றும் பூச்சிக்கொல்லி பணியாளர்கள் உட்பட 7 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் கருதி, ஹோட்டல் காலி செய்யப்பட்டு அனைத்து வாடிக்கையாளர்களும் வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டனர்.



