கோலாலம்பூர், ஏப்ரல் 20 – இஸ்ரேலிய ஆடவன் சுடும் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 10 பேர் மீண்டும் கைதாகியுள்ளனர்.
3 வெளிநாட்டவர் உள்ளிட்ட அந்த 10 பேரும்
பாதுகாப்புக் குற்றங்ளுக்கான SOSMA சட்டத்தின் கீழ் மீண்டும் கைதானதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
ஏற்கனவே சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் கைதான அவர்களின் தடுப்புக் காவல் முடிந்திருப்பதால், SOSMA-வின் கீழ் இனி விசாரணை தொடரும் என்றார் அவர்.
அவ்விவகாரத்தில் இதுவரை மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ஆடவனான Shalom Avitan, மற்றும் அவனுக்கு சுடும் ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் உள்ளூர் தம்பதியே அவர்களாவர்.
அம்மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுளை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.