ஈப்போ, மே-12 – சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக 41 பேருடன் சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, இன்று காலை ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-வது கிலோ மீட்டரில் தடம்புரண்டு கால்வாயில் கவிழ்ந்தது.
பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட அந்த 41 பேரும் அதில் காயமடைந்தனர்.
என்றாலும் பலருக்கு சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டதாக பேராக் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவ்விபத்தில் ஒரு காரும் பாதிக்கப்பட்டது; எனினும் காரோட்டி காயமேதும் ஏற்படாமல் தப்பினார்.
கெடா, குப்பாங்கில் இருந்து ஈப்போ நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கழிவு கால்வாயில் குடை சாய்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.