Latestமலேசியா

ஈப்போவில் பயங்கர புயல் காற்று: அஞ்சோங் பெர்சாமில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம்

ஈப்போ, ஜூன்-20 – பேராக், ஈப்போவில் உள்ள Anjung Bercham-மில் நேற்று மாலை வீசிய பயங்கர புயல் காற்றினால், 7 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

​வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததாக கிந்தா மாவட்ட பொதுத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த கடுமையான புயலால் அப்பகுதி உருக்குலைந்தது.

​புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததோடு, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அங்கு முழுமையாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

​இதனைத் தொடர்ந்து, சாலைகளை மறித்துக் கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈப்போ மாநகர மன்றத்தின் அவசரக்கால மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

​பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் TNB தற்காலிகமாக மின்சாரத்தை துண்டித்துள்ள வேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக Dewan Datuk Ahmad Said மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!