
கோலாலாம்பூர், ஜூலை-28-ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஓர் அழகான தீவு நாடு தான் மொரீஷியஸ்.
இது, தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில், மடகாஸ்கர் தீவுக்கு கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு ம் சுற்றுலாத் தலங்களுக்கும் பெயர்ப் பெற்ற மொரீஷியஸ் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 6 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டு தமிழாசிரியர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு அண்மையில் மலேசியா வந்த போது, நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’ அலுவலகத்திற்கும் வருகைப் புரிந்தனர்.
அங்கு, தினசரி செய்தி உருவாக்கம், இணைய ஊடகச் செயல்பாடு போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
‘வணக்கம் மலேசியா’ நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, இந்தத் தமிழாசிரியர்கள் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
இந்த மலேசியப் பயணம் எப்படி இருந்தது, மலேசியாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் காப்புப் பணிகள் குறித்தும், மலேசியத் தமிழர்கள் குறித்தும், ஆசிரியர்களில் சிலர் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
சந்திப்பின் இறுதியில், அனைவருக்கும் ‘வணக்கம் மலேசியாவின்’ goodie bag பரிசுப் பைகள் வழங்கப்பட்டதோடு, குழுப்படமும் எடுக்கப்பட்டது.



