
கெப்பாள பாத்தாஸ், செப்டம்பர்-12- மடானி அரசாங்கம், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு வாயிலாக நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த 10 முக்கியச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல், திறம்படச் சேவை வழங்குதல், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ‘smart traffic light’ முறை மூலம் ஊராட்சி மன்றங்களின் செயல்திறனைக் கண்காணிப்பது போன்ற அம்சங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக, KPKT அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் ஊராட்சி மன்றங்களின் town-hall கலந்தாய்வைத் தொடக்கி வைத்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
தற்போது ‘PBTPay’ போன்ற இணையப் சேவைகள் மூலம் பொது மக்கள் நேரில் வராமலேயே சேவைகளைப் பெற முடிகிறது.
தவிர, கடந்த 5 ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்களின் வருவாய் 1.5 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது.
மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்த AI அதிநவீனத் தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக ஙா கோர் மிங் சொன்னார்.
ஊராட்சி மன்றங்களின் உண்மையான வெற்றி என்பது மக்களின் திருப்தியிலும் மகிழ்ச்சியிலும் தான் அடங்கியுள்ளது எனக் கூறிய அமைச்சர், அதிகாரிகள் தேவையற்ற நிர்வாக கெடுபிடிகளைத் தவிர்த்து மக்களுக்குச் சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



