Latestமலேசியா

எரிபொருள் விலை உயர்வு: அனைத்துலக விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைக்கும் ஏர் இந்தியா

புது டெல்லி, மே-140உலகளாவிய விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது முக்கிய அனைத்துலக விமானச் சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

​எரிபொருள் விலை உயர்வு மற்றும் வட்டார போர் பதற்றங்கள் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, புது டெல்லி, மும்பை மற்றும் சென்னையிலிருந்து சிக்காகோ, ஷங் ஹாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கான விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

​இது தவிர, சான் ஃபிரான்சிஸ்கோ, பாரீஸ், மிலான் மற்றும் சிட்னி போன்ற நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

ஈரான் போர் மற்றும் Hormuz நீரிணை மூடப்பட்டதால், விமான எரிபொருள் விலை உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

​2025-ஆம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்து மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் இராஜினாமா போன்ற சவால்களைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

​இருப்பினும், தற்போதைய சூழலிலும் மாதம் 1,200-க்கும் மேற்பட்ட அனைத்துலக விமானங்களை இயக்கப் போவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தச் சேவைக் குறைப்பு காரணமாக, அனைத்துலக விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் எனப் பயணிகள் அஞ்சுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!