Latestஉலகம்

எவரஸ்ட் அடிவாரத்தில் மரண விபத்து: அடுத்தடுத்து தரையிறங்க முயன்ற 2 ஹெலிகாப்டர்கள் மோதல்

காட்மண்டு, நவம்பர்-4,உலகின் புகழ்பெற்ற எவரஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள பெரிச்சே (Pheriche) ஹெலிபேட் தளத்தில் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

​Fishtail Air மற்றும் Air Dynasty நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள், ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றபோது அவற்றின் சுழல் இறக்கைகள் (Rotor blades) எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

​இதில், Fishtail Air ஹெலிகாப்டரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 47 வயது சுற்றுப் பயணி வசந்த குமார் பலராம்துமு (Balaramthumu) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து பிரஜை மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டுநர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​எவரெஸ்ட் வட்டாரத்தில் அதிகரித்து வரும் வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து இந்த விபத்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், நேப்பாள பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!