
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம்
அஹ்மதாபாத், பிப்ரவரி-12,
இந்தியா, அஹ்மதாபாத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்ததே காரணமென, விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Cockpit எனப்படும் விமானி அறையின் குரல் பதிவுகள், எந்த விமானி விசையை இயக்கினார் என்பதை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த விமானியின் தந்தை குற்றச்சாட்டை மறுத்து, தனது மகன் எக்காரணம் கொண்டும் உயிர்களுக்கு ஆபத்து விளைவித்திருக்க மாட்டார் என திட்டவட்டமாகக் கூறினார்.
மகனின் மனநலம் குறித்த யூகங்களையும் மறுத்த அவர், புதிய விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தார்.
ஜூன் மாதம் நிகழ்ந்த அவ்விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்; இது இந்தியாவின் மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாகும்.



