Latestமலேசியா

ஓர் உயிரின் மதிப்பு RM30,000 ரிங்கிட்டா?; விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி இல்லை – டத்தோ ஸ்ரீ எம். சரவணன்

கோலாலம்பூர், செப்டம்பர் 9 – நாட்டையே உலுக்கியே மஜிஸ்ட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் சிக்குண்டு காணாமல் போன விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி இல்லை என்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தாருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.

அப்படியென்றால், ஓர் உயிரின் மதிப்பு 30,000 ரிங்கிட்தான? என்று ம.இ.கா துணைத் தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்குப் பதவியில் உள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் அப்படி யாரும் கேள்வி எழுப்பாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.

விஜயலட்சுமி மரணம் ஒரு அலட்சியத்தால் நடந்திருக்கலாம். இது தொடர்பில் சட்ட ரிதியாக வழக்கும் கூட தொடரலாம்.

ஆனால் இந்த வழக்கிற்கு விஜயலட்சுமி குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே, அவரின் குடும்பத்தாரிடம் கலந்துரையாடல் நடத்திய பின் மஇகா உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று, இன்று 78ஆவது பேராளர் மாநாடு குறித்து அறிவித்த பின், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!