
லுமுட், மே 8 – கடல் வழியாக சட்டவிரோத குடியேறிகளை கடத்த முயன்ற ஒரு கும்பலின் முயற்சியை, மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று அதிகாலை லுமுட் தெலோக் செனாங்கின் ( Telok Senangin) கடற்கரைக்கு அப்பால் நடத்திய ஒரு நடவடிக்கையில் 20 இந்தோனேசியர்களைக் கைது செய்து வெற்றிகரமாக முறியடித்தது.
சட்டவிரோத குடியேறிகளை தரைவழியாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுச் செல்வதற்கு முன்பு, மீன்பிடிப் படகுகளை முக்கியப் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுத்தி, அந்தக் கும்பல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான்
( Zakaria Shaaban )கூறினார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்கு ஒரு நபருக்கு சுமார் RM1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தடுத்துவைக்கப்பட்ட சில வெளிநாட்டினர், தடைசெய்யப்பட்ட குடியேறிகள் என நம்பப்படுவதாக தொடக்கக் கட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், குடிநுழைவுத் துறையின் கறுப்புப் பட்டியல் மற்றும் சந்தேக நபர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத நபர்கள் ஆவர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Zakaria தெரிவித்தார்.



