Latestமலேசியா

கட்டுப்பாட்டை இழந்து 3 வாகனங்கள் மீது மோதிய கார்; 84 வயது ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர் உயிர் தப்பினார்

கோலாலாம்பூர், மே-8-கோலாலாம்பூர், வங்சா மாஜூவில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து 3 வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

84 வயதான அந்த முன்னாள் இராணுவ வீரர் தனது காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு அல்லது மயக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரின் Nissan Latio கார், சாலையோரமாக நின்றிருந்த Toyota Corolla Cross, Proton Saga ஆகிய 2 கார்களை மோதி, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

சம்பவ இடம் விரைந்த மீட்புப் படையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அம்முதியவரைப் பத்திரமாக மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக அவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், தற்போது மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.

Toyota Corolla, Proton Saga கார்களின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!