Latestமலேசியா

கணவருடன் தனி ஜெட் விமானத்தில் ஹஜ் யாத்திரை பயணமா? நூருல் இசா மறுப்பு

கோலாலம்பூர், ஜூன்-9 – தாமும் தமது கணவர் Yin Shao Loong-கும் ஆடம்பர ஹஜ் பேக்கேஜ் நிதி ஆதரவில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதாகவும் தனி ஜெட் விமானத்தில் பயணித்ததாகவும் கூறப்படுவதை, பி.கே. ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் மறுத்துள்ளார்.

மாறாக, சவூதி அரேபிய தூதரகம் வெளியிடும் Mujamalah விசாவிலேயே தாங்கள் மெக்கா சென்றதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான அவர் சொன்னார்.

தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை பதிவுப்பெற்ற சுற்றுலா முகவர் நிறுவனமான Mimm Travel பார்த்துக் கொண்டது.

“வர்த்தக விமானத்தில் சொந்த செலவில் பயணம் செய்தோம்” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறினார்.

அவதூறு பரப்பட்டது போல தனி ஜெட் விமானத்தில் நாங்கள் பயணிக்கவில்லை; இலட்சக்கணக்கான மற்ற ஹஜ் யாத்ரீகர்களைப் போலவே நாங்களும் சென்றோம்” என நூருல் இசா கூறினார்.

மீனாவில் மற்ற மலேசியா யாத்ரீகர்கள் தங்குமிடம் அருகில் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரமாக அவர் பகிர்ந்துள்ளார்.

தனது ஹஜ் பயணம் குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அதனை மறுத்து உண்மையை விளக்க வேண்டிய கடமை தமக்கிருப்பதாக அவர் சொன்னார்.

என்னதான் அரசியல் களத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மதக் கடமை தொடர்பில் அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடுவது கூடாது என நூருல் இசா நினைவுறுத்தினார்.

நூருல் இசாவும் அவரின் கணவரும் பெரும் நிதி ஆதரவில் தனி ஜெட் விமானத்தில் சொகுசு ஹஜ் பயணம் மேற்கொண்டதாக முன்னதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!