Latestமலேசியா

கதவு கோளாறால் கிளானா ஜெயா LRT ரயில் சேவையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது

கோலாலம்பூர், ஜூலை-27- Kelana Jaya LRT வழித்தடத்தில் நேற்று ரயிலொன்றின் கதவு சரியாக மூடாமல் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலின் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

அத்தொழில்நுட்பக் கோளாறைத் தங்களது நடவடிக்கைக் குழுவினர் காலை 11.08 மணிக்குக் கண்டறிந்ததாக Rapid KL நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டன.

அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட ரயில் சேவையில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது.

அந்த ரயில் Taman Bahagia நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மற்றொரு ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக Rapid KL மேலும் கூறியது.

கதவு மூடாத தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!