ஈப்போ, ஏப் 11 – கம்பாருக்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 306.1ஆவது கிலோமீட்டரில் Naza Citra கார் மற்றும் Isuzu லோரி சம்பந்தப்பட்ட கோர விபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களில் மூவர் மரணம் அடைந்தனர். அந்த மூவரும் கேமரன் மலையில் பண்ணையில் வேலை செய்து வந்த வங்காளதேச தொழிலாளர்கள் என அறிவிக்கப்பட்டது. அந்த விபத்தில் 32 வயது கார் ஓட்டுனர் உட்பட நால்வர் காயமின்றி உயிர் தப்பியதாக கம்பார் OCPD
Superintenden Mohamad Nazri Daud தெரிவித்தார்.
அக்கார் ஓட்டுனர் உட்பட 8 பேர் கேமரன் மலையிலிருந்து கோலாலம்பூர் சென்ற வேளையில் அதன் டயர் பஞ்சர் ஆனதால் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தபோது பின்னால் வந்த லோரி அதனை மோதியது. இச்சம்பவத்தில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மூவர் இறந்தனர். மற்றொரு வங்காளதேச தொழிலாளர் கடுமையாக காயம் அடைந்த நிலையில் தாப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் உள்நாட்டைச் சேர்ந்த லோரி ஓட்டுனர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார்.