Latestமலேசியா

கம்போங் சுங்கை பாரு விவகாரம் Tan Sri Ambrin கருத்துக்கள் தொடர்பில் -சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கம்

கோலாலம்பூர், அக் -6,

கம்போங் சுங்கை பாரு குறித்து கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அம்பிரின் புவாங் ( Tan Sri Ambrin Buang) தெரிவித்த கருத்துக்கள் குறித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவிடம் Sharuddin Idris Shah விடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மறுபதிப்பு செய்த சிலாங்கூர் அரச அலுவலகம், இந்த விவகாரத்தில் டான்ஸ்ரீ அம்ப்ரின் புவாங்கின் ( Ambrin Buang) கருத்துக்களை சுல்தான் ஷராபுதீன் படித்ததாகக் கூறியது. அரசாங்கத்தின் முன்னாள் தலைமை கணக்காயவாளரும் , சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினருமான Ambrin , கம்போங் பாருவில் வசிப்பவர்.

சமுகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க, மலாய் விவசாயக் குடியேற்றமாக அதன் நிலத்தை அரசாங்க பதிவேட்டில் வெளியிடுவதன் மூலம் கூட்டரசு அரசாங்கம் கம்போங் பாரு விவகாரத்தை சரிசெய்ய வேண்டும் என்று Ambrin தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலத்தின் அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் மதிப்புமிக்கது, மேலும் மேம்பாடு மேற்கொள்ளப்பட்டு, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு விற்கப்பட்டால் , மலாய்க்காரர்கள் சொத்துக்களை வாங்கி அதை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, தனது கருத்துப்படி, மலாய் குடியேற்றத்திற்கான மறைந்த சுல்தான் சர் Alaeddin Sulaiman Shah வின் அசல் நோக்கம் பராமரிக்கப்பட வேண்டுமென sultan Sharafuddin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். கம்போங் பாருவின் வளர்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றாலும், அதை கவனமாகக் கையாள வேண்டும் என்பதோடு மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இதற்கு முன் அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!