காஜாங், ஆகஸ்ட் 23 – காஜாங்கில், டெலிவரி வேன் ஓட்டுனரை, ஆடவன் ஒருவன் கொன்று விடுவதாக மிரட்டிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஒரு நிமிடக் காணொளியில், ஆடவன் ஒருவன் கொச்சை வார்த்தைகளால் தீட்டி, பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை நோக்கி தலைக்கவசத்தை வீசி அடிப்பதைக் காணமுடிகிறது.
அப்போது, அந்த டெலிவரி வேன் ஓட்டுனர், ‘தான் பொருள் கொடுக்க வந்ததாகவும், எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்புவதையும் அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
எனினும், சம்பந்தப்பட்ட அந்த ஆடவன் பாதிக்கப்பட்டவரின் வார்த்தைகளை அலட்சியம் செய்து வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறுகிறான்.
வேன் கண்ணாடியை உடைக்க வேண்டாம் என்றால் கீழே இறங்குமாறும், இல்லையேல் கொன்று விடுவேன் என்றும் வெறித்தனமாகத் அவன் கூறுகிறான்.
அந்த காணொளியைப் பார்வையிட்ட பலரும், காவல் துறையினரைச் சம்பந்தப்பட்ட ஆடவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.