Latestமலேசியா

கார் ஓட்டும்போது காதல் சேட்டை: காதல் ஜோடிக்கு வலை வீசும் JPJ

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3 – கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஆபத்தான முறையில் காதல் சேட்டை செய்ததாக கூறப்படும் காதல் ஜோடி ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ வலை வீசி தேடி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலான காணொளியில், ஒரு பெண் சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுநரை நோக்கி அமர்ந்தபடி காரின் டாஷ்போர்டில் சாய்ந்திருந்தது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக JPJ-யின் அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முகம்மட் கிஃப்லி மா ஹசான் (Datuk Muhammad Kifli Ma Hassan) தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஓட்டுநர் மற்றும் பெண் பயணி இருவருக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆபத்தான செயல் விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், சம்பந்தப்பட்ட இருவரையும் அதிகாரிகள் தற்போது கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!