
ஜோகூர் பாரு, ஜூன் 3 – புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை 10ஆவது மாடியிலிருந்து கீழே வீசி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 வயது பெண், இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்தப் பெண், கடந்த மே 20ஆம் தேதி ஜோகூர் பாருவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் செயலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணையில், உயிரிழந்த குழந்தை அப்பெண்ணின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று என தெரியவந்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தனது மற்றொரு புதிதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதாக அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் 20,000 ரிங்கிட் பிணையில் அப்பெண்ணை விடுவிக்க அனுமதித்தது. இந்த வழக்கு ஜூலை 3ஆம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



