ராஃபா, மே 7 – காஸாவில் ஏழு மாத காலமாக நடைபெற்றுவரும் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் அமைதிக்கான ஆலோசனையை Hamas தரப்பு ஏற்றுக்கொண்ட வேளையில் , Rafah விலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவை மீண்டும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. அமைதி ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ஹமாஸ் தரப்பின் அறிவிப்பை வரவேற்கும் வகையில் பாலஸ்தீனர்கள் தெருக்களில் திரண்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அமைதிக்கான அந்த ஆலோசனை இஸ்ரேலின் முக்கிய நிபந்தனைகளிலிருந்து வேறுபட்டுள்ளதாகவும் சாத்தியமான உடன்பாடு ஒன்றை காண்பதற்கான பேச்சுக்களுக்கு அதிகாரிகளை அரசாங்கம் அனுப்பிவைக்கும் என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu வின் அலுவலகம் தெரிவித்தது. இதனிடையே அமைதி ஆலோசனைக்கான ஹமாஸின் பதிலை மறுஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா கூறியுள்ளது.