
கிள்ளான், ஜூலை 6 – சிலாங்கூர் கிள்ளான் பாசார் ஜாவா பகுதியில், சாலையோர வேலியில் துணிகளை காயவைத்த பெண் ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அதை Threads சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்களில், 10-க்கும் மேற்பட்ட ஆடைகள் சாலையோர வேலியில் காயவைக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது.
அந்தப் பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் புரியாத மொழியில் பதிலளித்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பல இணையவாசிகள் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், நாட்டின் நற்பெயரையும் பாதிக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.



