
சென்னை, அக்டோபர்-25,உலகத் தமிழர்களிடையே மிகவும் பிரபலமான மூத்த சமையல் கலைஞர் தாமு என்ற தாமோதிரன் திடீர் மரணமடைந்துள்ளார்.
Chef தாமு என பரவலாக அறியப்படும் அவர், இன்று அதிகாலை தனது 72 வயதில் காலமான செய்தி, இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமையலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ஏராளமான தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.
அவற்றில், விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இதன் மூலம் நட்சத்திர சமையல் கலைஞராக வலம் வந்த தாமு, 2010-ஆம் ஆண்டு 24 மணி நேரங்கள் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளைச் சமைத்து கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்தார்.
இவரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் அந்நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chef தாமுவின் மரணத்திற்கு சமூக ஊடகங்களில் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



