கட்ச், ஆகஸ்ட் 23 – கிராமம் என்றாலே வறுமையுடன் இருக்கும் என்பதை பொய்யாக்கி,குஜராத்தின் கட்ச் (Kachchh) மாவட்டத்தில் உள்ள மதாபர் (Madhapar) என்ற கிராமம் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாகக் கருதப்படுகிறது.
இந்த மதாபர் கிராமத்தில் வசிப்பவர்கள் ரூ 7,000 கோடி அதாவது 4,382,250,000 ரிங்கிட் மதிப்புள்ள வைப்பு தொகையை வங்கிகளில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.
இக்கிராமத்தின் செழிப்புக்கு காரணம், அங்கு வசிப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருவதேஆகும்.
இவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து இங்கு சேமித்து வைக்கிறாங்கள்.
மதாபர் கிராமத்தில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் உள்ளன; ஆனால் அதில் சுமார் 1,200 குடும்பங்கள்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து என வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
பல கிராமவாசிகள் வெளிநாட்டில் வாழ்ந்து வேலை செய்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்தை விட சொந்த கிராமத்தில் உள்ள வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளனர்.
இதனால்தான் இந்த கிராமம் ஆசியாவில் பணக்கார கிராமமாக உள்ளது.