Latestமலேசியா

குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள்: அரசு சட்ட திருத்தம்

கோலாலம்பூர், பிப்ரவரி 26-Strata எனப்படும் பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சினையாக இருப்பதால், அரசு சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்கள் அக்குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெறுவர்.

தற்போது, தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம் பழைய வாகனங்களை நீண்ட நீதிமன்ற செயல்முறைகளை தவிர்த்து அகற்ற முடியும். அதேவேளை, JPJ e-Dereg முறைமையின் மூலம் வாகன உரிமையாளர்கள் பழைய வாகனங்களை விரைவாக ஒப்படைக்க முடியும்.

இந்த நடவடிக்கைகள் குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகன பிரச்சினையை குறைத்து, குடியிருப்பின் சூழல் சீரமைப்பில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!