
கோலாலம்பூர், ஜூலை 4 – பூச்சோங்கில் மூன்று வயது குழந்தையை நாய் கடித்ததைத் தொடர்ந்து நாயின் உரிமையாளரான 60 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பாட்டி புகார் செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு அந்த பெண் கைது செய்யப்பட்டதாக செர்டாங் போலீஸ் தலைவர் பாரிட் அகமட்
( Farid Ahmad ) தெரிவித்தார்.
புகார்தரரும் அவரது பேரக்குழந்தையும் தாமான் லேக் எட்ஜில் (Taman Lake Edge ) உள்ள ஒரு விளையாட்டு மைதானத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தாக்கி குழந்தையின் இடது தொடையில் கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் செர்டாங் போலீஸ் தலைமையகத்துடன் 03-8074222 அல்லது அருகேயுள்ள போலீஸ் நிலையத்துடன் விசாரணைக்கு உதவ தொடர்பு கொள்ளும்படி பொதுமக்களை பாரிட் கேட்டுக்கொண்டார்.