Latestமலேசியா

குவாலா சிலாங்கூர் பகுதியில் விபத்தில் முடிந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் வாக்குவாதம்; இருவர் காயம்

குவாலா சிலாங்கூர், ஜூன் 25 – இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கிடையேயான கருத்து மோதல் சாலை விபத்திற்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூரிலிருந்து குவாலா சிலாங்கூர் (Jalan Kuala Selangor-Kuala Lumpur) நோக்கிச் சென்ற புரோட்டான் ஐரிஸ் காரின் பின்புறத்தில், ஆண் மற்றும் பெண் பயணித்த யமஹா மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆரம்ப விசாரணையில், குவாலா சிலாங்கூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற காரின் மீது மோதியது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!