
கோலாலாம்பூர், ஜூலை-2- கூட்டரசு நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 வாகனங்களை உட்படுத்திய விபத்து தொடர்பாக தம்பதியர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் நேற்றிரவு 9 மணியளவில் கைதானதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் உறுதிப்படுத்தியது.
முதல் சந்தேக நபர் ஜூலை 5 வரை விசாரணைக்காத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சந்தேக நபரான அவரின் மனைவி போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 20-ஆம் தேதி மாலை மணி 6.10 அளவில் ஷா ஆலமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த வீடியோவில், Perodua Kembara கார் ஒன்று மற்றொரு காரை ஆக வலப்பக்கச் சாலையில் முந்திச் சென்று ஆபத்தான முறையில் மறித்து பிரேக் அடித்து நின்றது.
எனினும், பின்னால் வந்த காரால் சட்டென நிறுத்த முடிந்ததால், மோதுவது தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, பின்னால் வந்த கார் இடப்பக்கச் சாலைக்கு மாறியபோது, முன்னே சென்ற Perodua Kembara மீண்டும் அதே பாதைக்குள் புகுந்து திடீரென பிரேக் போட்டது.
இந்த முறை Perodua காரை மோதுவதைத் தவிர்க்க முடியவில்லை; விபத்தை ஏற்படுத்திய கார் விட்டுரென அங்கிருந்து கிளம்பியது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சன்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.



