Latestமலேசியா

கூலிம் தீ விபத்து: தீயை அணைக்க இரண்டாவது நாளாகப் போராடி வரும் தீயணைப்பு வீரர்கள் 

கூலிம், ஜூலை-29-கெடா, Lunasசில் Jalan Makmur 7-ல் நான்கு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

நேற்று காலை 6.53 மணிக்குப் பரவத் தொடங்கிய தீயில் இரு ஆடைத் தயாரிப்புத் தொழிற்சாலைகள், ஒரு மெழுகுவர்த்தித் தொழிற்சாலை, ஒரு பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை என நான்கு தொழிற்சாலைகள் சேதமடைந்தன.

தொடக்கத்தில் மூன்று தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ, பின்னர் நான்காவது தொழிற்சாலைக்கும் பரவியது.

தீயைக் கட்டுப்படுத்துவதில் பலத்த காற்றும் துணிகள், பெட்டிகள், மெழுகு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் சவால்களாக இருப்பதாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், மூத்த உதவித் தீயணைப்பு ஆணையர் Awang Hidzel Awang Bujang தெரிவித்தார்.

இருப்பினும், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்படுவதை உறுதி செய்ய, மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீயணைப்புக் குழுவுக்கு காவல்துறை, Tenaga Nasional Bhd, சுற்றுச்சூழல் துறை ஆகியவையும் உதவி வருகின்றன.

மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தொடங்கிய தீ, பின்னர் அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மொத்த இழப்புத் தொகை இன்னும் கணக்கிடப்பட்டு வருவதாக Awang Hidzel மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!