அலோர் ஸ்டார், செப்டம்பர் -22, கெடாவில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை இன்று காலை 8,898 பேராக பதிவாகியது.
அவர்கள் 2,871 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்றிரவு 8,066 பேர் மட்டுமே அம்மையங்களில் தங்கியிருந்தனர்.
ஒட்டுமொத்தமாக 5 மாவட்டங்களில் 44 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆக அதிகமாக கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 5,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்டாங்கில் 1,487 பேரும், குபாங் பாசுவில் 1,382 பேரும், போக்கோ செனாவில் 783 பேரும், பண்டார் பஹாருவில் 147 பேருமாக PPS மையங்களில் தங்கியுள்ளனர்.
இவ்வேளையில், Sungai Bata, Sungai Anak Bukit, Sungai Kedah உள்ளிட்ட 4 ஆறுகளில் நீர் மட்டம் அபாய அளவில் இருப்பதாக, Infobanjir அகப்பக்கம் தெரிவிக்கிறது.