பெந்தோங், செப்டம்பர் -18, கெந்திங் மலையில், ஸ்ரீ மலேசியா ஹோட்டலுக்குப் பின்புறமுள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்று மாலை மரமொன்று வேரோடு சாய்ந்ததில், டேக்சி, வேன், கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
கடும் மழை மற்றும் புயல் காற்றின் போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, பஹாங் தீயணைப்பு மீட்புத் துறை கூயது.
கடும் மழை, வழுக்கலான சாலை உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புத் துறை, வாகனங்கள் மீது விழுந்த மரத்தையும் மரக்கிளைகளையும் அறுத்து அகற்றியது.
எனினும் அதில் எவருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.
மரம் விழுந்ததில் அக்கட்டடத்தின் மேற்கூரையும் இலேசாக சேதமுற்றது.