
கோலாலம்பூர், பிப் 26 – கெமமானில் விவசாய சந்தையில் கடந்த மாதம் மாற்று திறனாளி ஒருவரை தாக்கி காயம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐவருக்கு தலா 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆறு தனிப்பட்ட நபர்கள் மீது கெமமான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டபோது ஐவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வேளையில் மற்றொரு நபர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.
அபராதம் விதிக்கப்பட்ட ஐவரும் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தினர்.
மனநிலை பாதிக்கப்பட்ட 47 வயதுடைய மாற்றுத் திறனாளியை கடந்த மாதம் 17ஆம் தேதி , காலை மணி 9.30 அளவில் Padang Astanaவில் நடைபெற்ற விவசாய சந்தையில் சில தனிப்பட்ட நபர்கள் தாக்கியதாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியானது.
அந்த மாற்றுத் திறனாளி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் உணவு விற்பனை செய்யும் அங்காடிக் கடையில் மோதியதால் உணவுப் பொருட்கள் கீழே விழுந்ததால் அவர் தாக்கப்பட்டார்.