கெரிக், ஏப்ரல் 8 – பேராக் கெரிக்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்த வேளை, அவர்களின் மூன்றுப் பிள்ளைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் Banjaran Titiwangsa R&R அருகே Jalan Raya Timur Barat Gerik-Jeli நெடுஞ்சாலையில் அக்கோர விபத்து நிகழ்ந்தது.
Proton Persona, Toyota Innova என இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட அவ்விபத்தில் மொத்தமாக 8 பேர் காயடைந்திருக்கின்றனர்.
இரு வாகனங்களிலும் தலா ஐந்து பேர் பயணித்திருக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்தோரும் கெரிக் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.