Latestமலேசியா

கேபல் திருடர்களைக் காவல்துறை பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு; சிசிடிவி கேமரா கோணத்தால் ஏற்பட்ட தவறான புரிதல்!

ஷா ஆலாம், செப்- 23-அம்பாங், Kampung Tasek Tambahanனில் கேபிள் திருடர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டுகளுக்கு சிசிடிவி காட்சியின் கோணம் குறித்த தவறான புரிதலே காரணம் என சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் 19ஆம் தேதி கேபிள் திருட்டு குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல் ரோந்து வாகனத்தில் அதிகாரிகள் தங்களது பணியை மேற்கொள்ளவே சம்பவ இடத்துக்குச் சென்றனர். கேபிள் திருட்டுக் கும்பலைப் பாதுகாக்க அல்ல. முழு விவரங்களையும் அறியாமல் அவசரமாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என Shazeli கூறினார்.

சம்பவ இடத்தில் பல சந்தேக நபர்கள் இருந்த நிலையில், காவல் துறையினரைக் கண்டதும் சிலர் தப்பியோடினர். அங்கேயே ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 379ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 8,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தப்பியோடிய சந்தேக நபரின் நண்பர்களைக் கண்டறியும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தனவா என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலாகின. அது குறித்து கருத்துரைத்திருந்த சில இணையவாசிகள் காவல் வாகனம் கேபிள் திருடர்களை பாதுகாத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!