
கோத்தா கினாபாலுவில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு பெண் கொடூரக் கொலை; தந்தை, மகன் கைது
கோத்தா கினாபாலு, பிப்ரவரி-13,
சபா, செப்பாங்காரில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமான் இண்டா பெர்மாயில் குப்பைகள் கொட்டுமிடத்தில் அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொடூர கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் போலீஸார் 70 வயது முதியவரையும் அவரது 20 வயது மகனையும் கைதுச் செய்துள்ளனர்.
கொலைக்குப் பொறாமையே காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும் மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாக போலீஸ் கூறிற்று.



