ஜோகூர் பாரு, ஜூன் 19 – கோத்தா திங்கி, Tanjung Balau கடல் பகுதியிலிருந்து 25 கடல் மைலுக்கு கிழக்கே இரண்டு வர்த்தக கப்பல்கள் மோதிக்கொண்டன. இன்று காலை மணி 6.55 அளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜோகூர் பாரு கடல் மீட்பு குழு மையத்தின் தேடும் மற்றும் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். MT HAFNIANILE என்ற வத்தக கப்பல் MT CERES 1 கப்பலுடன் மோதியது .
Tanjung Sedili கடல் மண்டலப் பகுதியில் தேடும் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அரச மலேசிய கடற்படைக் கப்பல்கள் உட்பட மீட்பு பணிகளுக்காக கப்பல்கள் இன்று காலையில் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு விரைந்தன. எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்குவதற்காக இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.