பாரீஸ், ஆகஸ்ட்-29 – பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 3 வாரங்கள் ஆன நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.
பாரீசில் இன்று அதிகாலை அதன் தொடக்கவிழா ஒலிம்பிக் போட்டிக்கு எந்த விதத்திலும் குறையாமல் விமரிசையாக நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டியைப் போலவே பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவும் முதன் முறையாக அரங்கிற்கு வெளியே நடந்தியேறியது.
தொடக்க விழா அணிவகுப்பில் மலேசியா 94-காவது நாடாக நுழைந்தது; 24 தேசிய வீரர்கள் அதில் பங்கேற்றனர்.
இம்முறை உலகம் முழுவதுமிருந்து 4,400 வீரர்-வீராங்கனைகள் 22 வகையானப் போட்டிகளில் 549 தங்கப் பதக்கங்களுக்குப் போட்டியிடுகின்றனர்.
மலேசியா சார்பில் 30 விளையாட்டாளர்கள் பாராலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
4 தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்கோடு அவர்கள் பாரீஸ் சென்றுள்ளனர்.
பாராலிம் வரலாற்றில் மலேசியா இதுவரை மொத்தமாக 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்க கனவு நிறைவேறாத நிலையில், மலேசியர்கள் பாராலிம்பிக்கில் சாதிப்பார்கள் என நம்புவோம்.
இந்த 17-வது பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும்.